''மத்தியில், பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைந்தபின், ஏழைகளுக்கு, நான்கு ஆண்டுகளில், 1.25 கோடி வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன; 2022ல், நாட்டின், 75-வது சுதந்திரதினம் கொண்டாடும் போது, வீடு இல்லாத யாருமே இருக்கக்கூடாது, என்பதே எங்களின் இலக்கு,''


நாட்டை, இதற்கு முன் ஆட்சிசெய்த, காங்., தலைமையிலான அரசுகள், ஏழைகளின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. வறுமையை ஒழிக்கவும், தீவிரமான நடவடிக்கை எடுக்க வில்லை. 

ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் நலன்தான் முக்கியம், என்ற எண்ணத்தில் செயல்பட்டனர்.மக்கள் நலப்பணிகளை விரைந்து செயல் படுத்துவது, வளர்ச்சிப் பணிகளை அக்கறையுடன் செய்வது ஆகியவைதான், பா.ஜ., தலைமையிலான, தற்போதைய மத்திய அரசின் நோக்கம்

.மஹாராஷ்டிரா மண், பலசமூக சீர்திருத்த வாதிகளை நாட்டுக்கு வழங்கி யுள்ளது. இவர்களால், நாட்டின் ஒற்றுமை 

பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது சிலர், அரசியல் ஆதாயத்துக்காக சமூகத்தை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வறுமையில் வாடும் ஏழைகளுக்கு, நான்கு ஆண்டுகளாக, முறையான குடியிருப்புகளைக் கட்டிக்கொடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களிலும் இது போல் நடவடிக்கை எடுக்கப் பட்டாலும், துரதிர்ஷ்ட வசமாக, ஏழைகளின் நிலையை உயர்த்துவதற்குப் பதிலாக, ஒருகுடும்பத்தின் பெருமையை உயர்த்துவதையே, குறிக்கோளாக வைத்து செயல்பட்டனர். அவர்களின் முக்கிய இலக்கு, ஓட்டு வங்கிதான்

ஏழைகளின் நலன் மட்டுமே முக்கிய நோக்கம்.கடந்த, காங்., ஆட்சியில், ஏழைகளுக்காக நான்கு ஆண்டுகளில், 25 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. ஆனால், பா.ஜ., ஆட்சிக்கு வந்தபின், நான்கு ஆண்டுகளில், 1.25 கோடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.


வறுமையை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கில்தான், வீட்டுவசதி திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் பயன் அடைந்தவர்கள், தங்களின் வாரிசுகளை கல்விமூலம் உயர்த்தவேண்டும். இந்த திட்டத்தின் பயனாளிகள், 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் பயன்களையும் பெறமுடியும்.என் கையெழுத்திட்ட கடிதம், உங்களுக்கு அனுப்பப்படும். அதை நீங்கள், மருத்துவ மனையில் காட்டினால், உங்களுக்கு ஓர் அட்டை கொடுக்கப்படும். அதைவைத்து, ஆண்டுக்கு, 5 லட்ச ரூபாய் வரை, எந்த நோய்க்கும் இலவசமாக சிகிச்சை பெற முடியும்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., – சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அகமது நகர் மாவட்டம், ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலில், சாய்பாபாவின் நுாற்றாண்டு சமாதி தினவிழா கொண்டாடப் படுகிறது. 

இதையொட்டி பிரதமர் மோடி, ஷீரடிக்கு நேற்று சென்றார். அங்குள்ள சாய்பாபா கோவிலில், சிறப்புபூஜைகள் செய்த அவர், சாய்பாபா உருவம்பொறித்த வெள்ளி நாணயத்தையும் வெளியிட்டார்.இதைத்தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பிரதமர் பேசியது:

Leave a Reply

Your email address will not be published.