பா.ஜனதா சார்பில் மத்தியபிரதேசத்தில் இருந்து டெல்லி மேல் சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள இல.கணேசன் சென்னையில் காஞ்சி சங்கராச் சாரியாரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை கடற்படையால் தாக்குதலுக் குள்ளாகும் தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக டெல்லியில் நடக்கும் பேச்சு வார்த்தையில் சுமூகதீர்வு ஏற்படும் என்று நம்புகிறேன்.

ஏற்கனவே இதுதொடர்பாக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜிடம் விரிவாக பேசி இருக்கிறோம்.ராணுவத்தினருக்கு ஒரேபதவி ஒரே ஓய்வூதியம் தொடர்பாக ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யதவறிய, தாமதப்படுத்திய காங்கிரசுக்கு அதைப்பற்றி பேச தகுதிஇல்லை.

வீணாக குழப்பத்தை ஏற்படுத்தவும், குழம்பியகுட்டையில் மீன் பிடிக்கவும் ராகுல் காந்தி முயற்சிக்கிறார். ராணுவத்துக் குள்ளேயே பதட்டம், பீதி, கலவரத்தை உருவாக்க முயற்சிக்கும் எவர்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தற்கொலை விவகாரத்தில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடிவு வருவதற்குள் அப்படி என்ன அவசரம்?

ராகுல்காந்தி ஒருநாள் மட்டுமே கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு விடுவிக்கப் பட்டுள்ளார். இது அவருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. அரசியல் வேறு நாட்டு நலன் வேறு. நாட்டு பாதுகாப்பு விசயங்களில் எந்த சமரசத்துக்கும் இடம் இல்லை. நாட்டைபாதுகாக்க எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply