வீணா போன விஞ்ஞானிங்க தொல்லை தாங்க முடியலையே !! என்ன கொடுமைடா இது…..!

ONGC யில் இருக்கின்ற ஜியாலஜிஸ்டுகளுக்கும், ஜியோ ஃபிஸிசிஸ்டுக்கும் கூட தெரியாத விஷயங்களை எல்லாம் இவர்கள் வாட்ஸாபில் சகட்டு மேனிக்கு அனுப்பி விடுகிறார்கள். ஏண்டா ஹைட்ரோ கார்பன் எடுக்கற இடத்துல தண்ணி வத்தி போகும், பாலைவனமா மாறும், பூகம்பம் வரும்னு மெஸ்ஸேஜ் அனுப்பியிருக்கியே நீ என்னடா படிச்சிருக்கன்னு கேட்டா….., பத்தாங் கிளாஸ் பெயில்னு சொல்றான். இப்படி முடிச்சவுக்கிகளும், மொள்ளைமாறிகளும், எவனோ சமூக விரோதி தயார் செஞ்சு கொடுத்ததை பரப்பிக் கிட்டே இருக்காங்க.

எதுக்கு இந்த தறுதலை க்ரூப் இப்படி ஒரு செய்தியை பரப்பணும் ?
அப்படி என்ன இவங்களுக்கு சமூக அக்கறைனு பார்க்கணும்னா….
இந்த தறுதலைங்களை முதல்ல ரக வாரியா பிரிக்கணும்…..!

1) வஹாபிய க்ரூப்பு – இவைகளுக்கு இந்தியா எந்த விதத்திலும் ஹைட்ரோ கார்பன் மற்றும் கச்சா எண்ணை உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து விடக்கூடாது என்பது ரொம்ப முக்கியம். இவங்களுக்கு  ஷேக்குங்க வாழ்க்கையும், அவனுங்க அனுப்பர எச்சை காசும் ரொம்ப முக்கியம். அதை விட மோடி என்ன செஞ்சாலும் அதை எதுக்ணும்கறது ரொம்ப ரொம்ப முக்கியம்…..!

2) திராவிட/கம்யூனிஸ்டு/காங்கிரஸ் க்ரூப் – இந்த க்ரூப்புக்கு மோடியை ஒரு தமிழ் விரோதி என்று காட்டுவது அரசியல் வாழ்வாதாரமாகிறது. அதனாலதான் மோடி என்னவோ தமிழ்நாட்டை, மேப்பிலிருந்து அழிப்பதற்காக இதையெல்லாம் செய்யறார்னு காட்டறது முக்கியம்…..!

3) பொது ஜன க்ருப்பு – இந்த க்ரூப்தான் பாவப்பட்ட க்ரூப். நிஜமாகவே தமிழ்நாட்டுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயத்தோட இருக்கற க்ரூப். இந்த க்ரூப்புக்குதான் நாம் பலவற்றை தெளிவிக்க வேண்டும்.

இந்த திட்டத்திற்கு தண்ணீரின் பயன்பாடெல்லாம் அவசியமே இல்லை. நாம் தண்ணீர் எடுக்க 'போர்' போடுவது போலான செயல் முறைதான். ஒரு குறுகிய இடத்தில் மிக ஆழமாக துளையிட்டுச் செல்வார்கள். இது உலகம் முழுவதும் செய்யப்படும் நடைமுறை.

உலகின் மிகப்பெரும் பெட்ரோலிய இறக்குமதி நாடாக இருந்த அமெரிக்க இப்படிப்பட்ட பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தித்தான் இன்று பெட்ரோலிய ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. உலக கச்சா எண்ணை வீழ்ச்சிக்கு அதுவே காரணம்.

அவ்வகையில் அனைத்து முன்னேறிய நாடுகளிலும் தற்போது ஹைட்ரோ கார்பன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் நம் விஞ்ஞானிகளால் ஆய்வு செய்யப்பட்டு உற்பத்தியை தொடங்கியுள்ளோம். இது நம் நாட்டுக்கு மிக மிக அவசியமானது.

இந்தியா ஆற்றல் உற்பத்தியில் தன்னிறைவை அடைந்தாக வேண்டும். அதுதான் நம்மை தலைநிமிரச் செய்யும். இன்று நம்மை மிகச்சிறந்த தேசப்பக்தர் ஆண்டுக் கொண்டிருக்கிறார். அவரின் மேலும், இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகள் மீதும், நாம் நம்பிக்கை வைப்போம். சமூக விரோத‌ கழிசடைகளின் பரப்புரைகளை நாம் புறந்தள்ளுவோம்…..!

இந்தத் தீயசக்திகளை, ஓட்டுப் பொறுக்கிகளை, உண்டி குலுக்கிகளை, அன்னியநாட்டுக்கு விலை போகும் பரதேசிகளை, லெட்டர்பேட் பக்கிகளை, கமிஷன் ஏஜெண்டுகளை….. ஒழித்தால் மட்டும்தான் இந்தியாவால் முன்னேற முடியும்….!

ஜெய்ஹிந்த் !

அனுமான்ஷியன் மற்றும் Ganesan Priya

Tags:

One response to “வீணா போன விஞ்ஞானிங்க தொல்லை தாங்க முடியலையே !! என்ன கொடுமைடா இது…..!”

  1. jagadeesan says:

    தமிழ் நாடு மக்களிடம் கடந்த பத்து வருடமாய் பார்த்து வருகிறேன் ஒரு நல்ல விஷயங்களுக்கு கூட எதிர்ப்பு காட்டுவது என்பது நம்ம தலைல நாமே மண்ணை போட்டுக்கொள்வதற்கு சமமாகும். இதை ஏன் மக்கள் புரிந்துகொள்ள முடியவில்லை? தமிழ் நாடு வளரக்கூடாது என்று நினைக்கும் பிற்போக்கு வாதிகளின் பொய்மையான பேச்சிகளுக்கு மதி மயங்கி அவர்களின் பின்னால் செல்வது என்பது நல்லது நடக்க வாய்ப்பேயில்லை. பிற்போக்குசக்திகளின் செயல் பாட்டால் தமிழ் நாடு மற்ற மாநிலங்களை விட 100 வருடம் நாம் பின்னோக்கி இருப்போம் என்பது கண்டிப்பாக நடக்கக்கூடியது. தமிழ் நாட்டின் எதிர்காலம் இருண்டு போவது உண்மை.மக்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல் எந்த திட்டங்களுக்கும் எதிப்புக்காடுவது நல்லது அல்ல.கூடங்குளம் அன்று எதிர்ப்பு ஆனால் கூட கூடங்குளம் இன்று இந்தியாவுக்கே மின்சாரம் கிடைக்கிறது.ஒரு திட்டம் வந்தால் நல்லதும் நடக்கும் கேட்டதும் நடக்கும். கேட்டது வராமல் நடப்பதற்கு என்னத்தேவை என்பதை அறிந்து அதற்க்கான வரைவுகளை செய்தல் எந்த திடடமும் நன்மைதரும். கெய்ல் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம்,இனி வரும் திட்டங்கள் அனைத்தும் பிற்போக்கு சக்திகளின் தூண்டுதல் பெயரால் செயல் இழந்து போகும். தமிழ் நாடு நாசமா போக்கும்.இன்று பிற்போக்கு சக்திகளின் கையில் தமிழ் நாடு உள்ளது என்பது உண்மை. மக்கள் விழிப்புணருடன் செயல்பட்டால்தான் இனி வாழமுடியும்

Leave a Reply