சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சலைட்தாக்குதலில் பலியான, சி.ஆர்.பி.எப்., வீரர்களின் உடல்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நேற்று அஞ்சலி செலுத்தினார். பின் செய்தியாளர்களிடம் பேசியவர், நக்சலைட்டுகளை ஒழிக்க, மத்திய அரசு புதுவியூகம் வகுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

சத்தீஸ்கரில், பா.ஜ.,வை சேர்ந்த ரமண்சிங் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், நக்சலைட்டுகள் ஆதிக்கம்நிறைந்த பகுதிக ளில், சாலை போக்குவரத்தை மேம்படுத்த, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.
 


சுக்மா மாவட்டத்தில், பழங்குடியினர் அதிகம்வசிக்கும் பகுதிகளில், நக்சலைட்டுகள் ஆதிக் கம் செலுத்தி வருகின்றனர்.இந்த கிராமங்களை, மாநிலத்தின் பிறபகுதிகளுடன்இணைக்கும் வகையில், சாலை அமைக்கும் பணி கள் நடந்து வருகின்றன.சி.ஆர்.பி.எப்., துணைராணுவ படை யினர், அங்கு பாதுகாப்பு பணியில்

ஈடுபட்டனர். அப்போது, அங்கு திடீரெனவந்த நக்சலைட்டுகள், துணை ராணுவப்படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.இதில், தமிழக வீரர்கள நான்கு பேர் உட்பட, 25 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இந்தசம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

இந்நிலையில், உயிரிழந்தவீரர்களின் உடல்களுக்கு, சத்தீஸ்கர் முதல்வர் ரமண்சிங், கவர்னர் பல்ராம்ஜி டான்டன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது, ''நக்சலைட்டுகளை ஒடுக்க, புதியவியூகம் வகுக்கப்படும்,''என, ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் பலரும், 'வீரர்களின் தியாகம் வீணாககூடாது; நக்சலைட்டு களை அடியோடு ஒழிக்க வேண்டும்' என,கோஷம் எழுப்பினர்.


சத்தீஸ்கரில், நக்சலைட் தாக்குதலில் பலியான வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:

சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீதான தாக்குதல் கண்டனத்திற்குரியது. நக்சல்களை ஒடுக்கும் நட வடிக்கையில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து, இன்னும்வேகமாக செயல்படவுள்ளன. இதில், பலபுதிய உத்திகள் கையாளப்படும். வீரர்களின் உயிர்த் தியாகம் வீணகாது. பழங்குடியின மக்களின் உதவியால், நக்சல்கள் தங்கள் உணவுத்தேவையை பூர்த்திசெய்து கொள்கின்றனர்.


அப்பாவி பொதுமக்களை அரணாக வைத்து, நக்சல்கள், நாசவேலைகளில் ஈடுபடு கின்றனர். நக்சல் பாதிப்புக்குள்ளான அனைத்து மாநில முதல்வர்களுடன், விரைவில், மத்திய அரசு பேச்சுநடத்தும். மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். புது வியூகம் வகுத்து, அதன்படி, நக்சல்களுக்கு எதிரான வேட்டைதொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:

Leave a Reply