யுத்த களத்தில் வீரமரணம் அடையும் வீரர்களின் குடும்பத்தார்க்கு வழங்கிவரும் இழப்புத்தொகையை, நான்கு மடங்காக உயர்த்திவழங்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்க, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முடிவுசெய்துள்ளார்.
யுத்த களத்தில் வீரமரணம் அடையும் வீரர்கள் மற்றும் படுகாயம் அடையும் வீரர்களின் குடும்பத்தார்க்கு, மத்தியஅரசு ரூ.2 லட்சம் இழப்புத் தொகையாக வழங்கி வந்த நிலையில், தற்போது, அந்த தொகையை நான்கு மடங்காக உயர்த்தி, ரூ.8 லட்சமாக வழங்க, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் முடிவு செய்துள்ளதாக, இன்று (சனிக்கிழமை), மத்திய பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ராஜ்நாத்சிங், மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக அமல்படுத்திய “பாரத் கீ வீர்” நிதியுதவியும் மக்களால் பெரிதும் பாராட்டப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.