உள்நாட்டில் விலைவீழ்ச்சியால் வெங்காயம் ஏற்றுமதி யாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடுமுழுவதும் கடந்த ஒரு வாரமாக வெங்காயம் விலை கடும்வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ.50-க்கு விற்ற பெரியவெங்காயம் வீழ்ச்சி அடைந்து ரூ.10-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் சாம்பார் வெங்காயமும் ரூ.60-ல் இருந்து ரூ.20 ஆக குறைந்துள்ளது.

இதனால் நுகர்வோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் வெங்காய விவசாயிகளும், வியாபாரிகளும் பெருத்தநஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். விவசாயிகளிடம் இருந்து கிலோ ரூ.5-க்குதான் வெங்காயம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பயிர்செலவு கூட எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மராட்டியம், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில்தான் வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இதையடுத்து மத்திய மந்திரி நிதின்கட்காரி வர்த்தகத் துறை மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து உள்நாட்டில் வெங்காயம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருப்பதை எடுத்துக்கூறி ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடி, வர்த்தகத் துறை மற்றும் வேளாண்மைத் துறை மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து வெங்காயம் ஏற்று மதியை ஊக்கப் படுத்தும் வகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வர்த்தகத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார். இந்தசலுகை வருகிற 31-ந்தேதி வரை நீடிக்கும் என்றும் தேவைப்பட்டால் நீடிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply