நாடு முழுவதும் வெங்காயவிலை உயர்வு பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறித்து, மத்திய உணவு அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், டெல்லியில் உயர்அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராம்விலாஸ் பாஸ்வான், கன மழை காரணமாக நடப்பு பருவத்தில் 40 சதவீதம் அளவுக்கு வெங்காயஉற்பத்தி குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

தேவைக்கும் பற்றாக்குறைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக்குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்த ராம்விலாஸ் பாஸ்வான், வெங்காய ஏற்றுமதிக்கு முழுமையாக தடை விதிக்கப் பட்டுள்ளதாகவும், எகிப்து, ஈரான், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருவதாகவும் குறிப்பிட்டார்.

Comments are closed.