வெளிநாடுகளில் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் தகுந்தபாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முழுவீச்சில் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக மத்திய அமைச்சர் திருமதி. சுஷ்மாசுவராஜ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள வணிகவளாகம் ஒன்றில், கடந்த வெள்ளியன்று, ஜக்ஜீத்சிங் என்ற 32 வயது சீக்கியர், மர்ம நபர்களால் கத்தியால்குத்தி கொலை செய்யப்பட்டார். இது குறித்து பஞ்சாப் முதலமைச்சர் திரு. அமரிந்தர் சிங், டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து, ஜக்ஜீத்சிங் கொல்லப்பட்டது குறித்து, அமெரிக்காவிற்கான இந்திய தூதரிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். மேலும், வெளிநாட்டில்வாழும் அனைத்து இந்தியர்களை பாதுகாக்கும் பணியில் மத்திய அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவருக்கும் தகுந்தபாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் திருமதி. சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply