கன்னியா குமரியில் பாஜக சார்பில் 2ம் கட்டமாக வந்து இறங்கிய நிவாரண பொருட்களை வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு ஒழுங்கு படுத்தும் பணியில்  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்த போதிலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப் போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரம்காட்டி வருகின்றன.  அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தடுக்கும்வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்தும் தவிப்பதால் பல்வேறு இடங்களில் மக்கள் உணவின்றி தவித்துவருகின்றனர்.

இவர்களுக்கு அரசியல் கட்சியினர் உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். ஏற்கனவே முதற்கட்ட தமிழகம்முழுவதும் பாஜக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில்,  பாஜக சார்பில் 2ம் கட்டமாக நிவாரண பொருட்களை வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ஒழுங்குபடுத்தும்பணியில் தனது தொண்டர்களுடன் பொன்.ராதாகிருஷ்ணன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தபோதிலும், அதை எதையும் கருத்தில் கொள்ளாமல்  உணவு நில்லாமல் தவிக்கும்மக்களுக்கு உணவு வழங்கியும், இலவச நலத்திட்ட உதவிகளை வழங்கிவருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்றை பெற்றுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் என்ற எந்த ஒருபந்தாவும் இல்லாமல் என் தொகுதி மக்களுக்கு நான் செய்யாமல் யார் செய்வார்கள் என்ற தோணியில் எடுத்துகட்டிக் கொண்டு வேலைபார்க்கும் பொன்.ராதா கிருஷ்ணனின் பணி  பாராட்டுக்களை குவித்து வருகிறது.

Comments are closed.