சென்னை அடுத்துள்ள மாமல்ல புரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி இன்று மாலை குண்டு துளைக்காத அரங்கத்தில் சந்தித்துபேசினார்.

 

இதற்காக கோவளம் கடற்கரை பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த பிரதமர் நரேந்திரமோடி அங்கிருந்து புறப்பட்டு மாமல்லபுரம் நோக்கிசென்றார். மாமல்லபுரத்தில் வந்து இறங்கிய பிரதமர் மோடி தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை மேல்துண்டுடன் இன்று காட்சியளித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் வந்துசேர்வதற்கு சிறிதுநேரம் முன்னதாக மாமல்லபுரம் சிற்பங்களை மோடி சற்று நேரம் சுற்றிப்பார்த்தார்.

Comments are closed.