பாரதம் என்பது சாதாரண நிலப்பரப்பு அல்ல; சக்தியின் வடிவம் என்கிறார் மகரிஷி அரவிந்தர். தேசத்தில் ரிஷிகள், முனிகள், ஞானிகள், ஆதிசங்கரர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற பெரியவர்கள், தேசம் முழுவதும் சென்று புனிதப்படுத்தி இருப்பதால், பாரதத்தை புண்ணிய பூமி என்கிறோம்.

அதற்கு காரணம், வேதம் இங்கு இருப்பதால் தான்; வேதம் இல்லாவிட்டால், இந்த தேசமே கிடையாது. புத்தகத்தில் கொண்டு வர முடியாத விஷயம் வேதம். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தில் தான் புத்தக வடிவில் வந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, குரு, சிஷ்யனுக்கு கற்றுக் கொடுத்து வந்ததே வேதம். வேதத்தை படிக்க முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சி உள்ளது. வேதம் படிக்காதவர்களுக்கு தான் அதன் அருமை புரியும்.

 

வேதம் படிப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஒரே அந்தஸ்து தான் இருக்கிறது. தங்கள் பிள்ளைகள், வேதம் படிக்க வேண்டுமா என்று வேதம் படித்தவர்கள் நினைப்பது போல, தன் மகன் விவசாயம் செய்ய வேண்டுமா என, விவசாயிகள் நினைக்கின்றனர். எப்படி விவசாயம் செய்யாமல் ஒரு நாடு இருக்க முடியாதோ; அதேபோல, வேதம் இல்லாமல் நாடு இருக்க முடியாது. வேதம் படிக்காதவர்கள், மற்ற வர்களை வேதம் படிக்கச் செய்வதன் மூலம், வேதம் படிக்காத பாவம் குறைகிறது என, காஞ்சி பெரியவர் கூறியிருக்கிறார். வேதம் இருக்கிறது; வளர்கிறது என்பது பெருமை.

Leave a Reply