வேற்று கிரக வாசிகள் இருப்பது உறுதியானது !! நாசாவால் கேட்கப்பட்ட வேற்று கிரக சமிஞ்சை !!

உலகையே புரட்டிப் போடும் வகையில் கடந்த வாரம் அமெரிக்க நாசா விண்ணுக்குஅனுப்பி உள்ள வாயேஜர் 2 விண்களம் மூலமாக வேற்று கிரகவாசிகள் அனுப்பியுள்ள சமிஞ்சைகள் கிடைக்க பெற்றுள்ளன. இதன் மூலம் வேற்று கிரகவாசிகள் இருப்பது உறுதி படுத்தபட்டுள்ளது. வாயேஜர் 2 தற்போது சூரியனின் ஆளுமையை கடந்து ‘இண்டர் ஸ்டெல்லார்’ பகுதியை கடந்தவருடம் அடைந்து விட்டது. இந்நிலையில் வாயேஜர் 2 வில் உள்ள ‘பிளாஸ்மா சைன்ஸ் எக்ஸ்பெரி மெண்ட்’ கருவி வேற்று கிரகவாசிகளின் சில சமிஞ்சைகளை பெற்று தந்துள்ளது. இந்த சமிஞ்சைகள் வாயேஜரில் இருந்து பூமிக்கு ஒளிவேகத்தில் வந்தடையவே ஒரு நாள் ஆகி விடுகின்றதாம்.

கடந்த வாரம் பெறப்பட்ட இந்த சமிஞ்சைகளை தற்போது நாசா வெளியிட்டுள்ளது. இந்தசமிஞ்சைகள் மூலம் வேற்று கிரக வாசிகள் என்ன தகவலை பரிமாற உள்ளார்கள் என புரியவில்லை. மனிதர்களின் இருப்பை நன்கு அறிந்துக்கொண்டே இந்த சமிஞ்சைகளை பூமியை நோக்கி வேண்டும் என்றே வேற்று கிரகவாசிகள் அனுப்பி உள்ளனரா தெரியவில்லை. இந்த சமிஞ்சைகளை ஒலிவடிவத்தில் மாற்றினால் கீழ்கண்ட ஒலியில் இருக்கின்றது. இதை டீ-கோட் செய்து தருபவர்களுக்கு ஒருலட்சம் டாலர்கள் பரிசையும் தங்கள் வலைமனையில் அறிவித்துள்ளது நாசா. (ஆங்கிலத்தில் உள்ள இந்த சமிஞ்சை ஒலிகளை தமிழ் படுத்தி கீழே தந்துள்ளேன். யாருக்கேனும் சாத்தியப்பட்டால் நாசா வலைமனைக்கு சென்று பரிசை வெல்லலாம்)

:##₹%%&சீ#னி#%%சக்₹₹கர#₹சித்%&த&#ப்பா#%&&₹@#%&மூ#&&+ல%&ப்ப%-+த்@@தி#₹%ரம்%%எங்₹%%க₹&ப்%&ப்பா ?????

ஒருலட்சம் டாலர்கள் பரிசு என்பது ஒரு பக்கம் இருந்தாலும், கோடிக்கணக்கான ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்கும் வேற்றுகிரக வாசிகள் அப்படி என்ன நம்மிடம் கேட்க விரும்புகிறார்கள் என்பதே வியப்பாக இருக்கிறது.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

Comments are closed.