நாட்டின் வேளாண்துறையை மாற்றியமைக்கவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் இரண்டு மசோதக்களை நாடாளுமன்றம் இன்று நிறைவேற்றியது.

விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், 2020 மற்றும் விலைஉறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2020, ஆகியவற்றை நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

2020 செப்டம்பர் 17 அன்று மக்களவையால் நிறைவேற்றப்பட்ட இந்தமசோதாக்கள், மாநிலங்களவையால் இன்று நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பேசிய மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர்  தோமர், விவசாயிகளின் முழுபாதுகாப்பு இந்த சட்டங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. “குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் தொடருமென்று மாண்புமிகு பிரதமரே உறுதியளித்துள்ளார்,”  என்றார்.

Comments are closed.