மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சியால், ஷார்ஜாவில், கப்பல் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட, மூன்று தமிழக இளைஞர்கள், நேற்று அவரைசந்தித்து, நன்றி தெரிவித்தனர்.நாகை, தஞ்சை, கரூர் மாவட்டங்களை சேர்ந்த, மூன்று இளைஞர்கள், சென்னையை சேர்ந்த தனியார்நிறுவனம் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார் ஜாவில் பணிக்காகசென்றனர்.

அங்கு கப்பலில், பலநாட்களாக, அவர்கள் அடைத்து வைக்கப் பட்டு இருந்த தகவலை, பெற்றோர் மூலம் அறிந்து, அவர்களை மீட்க, பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்பாடுசெய்தார். அதைத் தொடர்ந்து, நேற்று சென்னை வந்தவர்கள், பொன்.ராதாகிருஷ்ணனை, கமலாலயத்தில் சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply