இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பொருட்டு ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

"தொடங்கிடு இந்தியா ('ஸ்டார்ட் அப் இந்தியா), எழுந்துநில் இந்தியா (ஸ்டாண்ட் அப் இந்தியா')" என்ற இரண்டு தொலைநோக்குத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம்தேதி அறிமுகப்படுத்தினார்.

இதனையடுத்து, கடந்தமாதம் மான் கீ பாத் வானொலி உரையில் பேசிய பிரதமர் மோடி, ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் ஜனவரி மாதம் 16ம் தேதி (இன்று) துவங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மனித வள மேம்பாட்டுதுறை அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் இரண்டும் இணைந்து என்.ஐ.டி, ஐ.ஐ.டி., உள்ளிட்ட இடங்களில் 75 ஸ்டார்ட்அப் மையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மோடி தனது டுவிட்டர் வலைதளத்தில் கூறியுள்ளதாவது:-

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் தொடக்கவிழா இன்று தொடங்குகிறது. இந்நிகழ்ச்சி நமது இளைஞர்களின் ஆற்றலையும் தொழில்புரியும் உற்சாகத்தையும் கொண்டாட கூடியது.

இன்று மாலை நடைபெறும் இந்தநிகழ்ச்சியில் நான் கலந்துகொள்கிறேன். புதிதாக தொழில்தொடங்க உள்ளவர்களுடன் கலந்துரையாடலை முன்னெடுத்து செல்லும் இது இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply