மக்களவையில் ராமநாத புரம் தொகுதி அ.தி.மு.க உறுப்பினர் அ.அன்வர் ராஜா, ரத்தம் தங்குதடையின்றி செல்வதற்காக இதயச்சுவர் தமனியில் பொருத்தப்படும் "ஸ்டென்ட்' குழாய் சாதனத்தை அதிகளவில் உற்பத்திசெய்து நோயாளிகளுக்கு இலவசமாக வழங்குவது தொடர்பாக துணைக்கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் ஜே.பி. நட்டா அளித்தபதில்: மத்திய அரசின் சுகாதாரத்திட்டத்தில் (சிஜிஎச்எஸ்) "ஸ்டென்ட்' சாதனத்தின் விலைக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மருந்தை மெதுவாகக் கரையச்செய்யும் ஸ்டென்டின் அதிகபட்சவிலை ரூ.23 ஆயிரமாகும். கோபால்ட்-குரோமியம் உலோகம் சார்ந்த ஸ்டென்ட் விலை ரூ.12 ஆயிரம். கரோனரி வாஸ்குலர் அல்லாத உலோகஸ்டென்டின் விலை ரூ.10 ஆயிரமாகும்.

சிஜிஎச்எஸ் திட்டத்தில் விலை உச்ச வரம்பு நிர்ணயிக்கப் பட்டதால் பல்வேறு வகையான ஸ்டென்டுகளின் விலை குறைந்துள்ளன. அத்தியாவசிய மருந்துகளுக்கான தேசியப்பட்டியலில் இந்த ஸ்டென்ட்களை கொண்டு வந்திருக்கிறோம். இதனால், ஸ்டென்ட்விலை நிச்சயமாக குறையும். மத்திய அரசின் "அம்ரித்' மருந்துக்கடைகள் திறக்கப் பட்டுள்ளதால் பல்வேறு நிறுவனங்களின் ஸ்டென்ட்கள் விலை முறையே 73%. 76%, 75%, 77% குறைந்துள்ளது என்றார் அமைச்சர் நட்டா.

Leave a Reply