ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து ஆரம்பத்தில்இருந்து போராடியவன் நான்.  முந்தைய தேர்தலின் போது, ஸ்டெர்லைட் ஆலைச்சார்பில் எனக்கு பணம் கொடுத்த போது கூட அதைத் திருப்பி அனுப்பினேன். நான் பெட்டிவாங்கிவிட்டதாக பலரும் அவதூறு பரப்பிவருகிறார்கள்" என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்களைத் துவக்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசியவர், "ஸ்டெர்லைட் ஆலை வருவதற்கு முன்பு  4 நாட்கள்  நான் உண்ணா விரதம் இருந்தேன். அன்று மக்கள்யாருமே ஆதரவுதர தயாராக இல்லை. அனைவருமே வேலைக்கிடைக்கும் என்றே நினைத்து இருந்தனர். அதனால் ஆலை எளிதாகத்  துவங்கப்பட்டுவிட்டது. அப்போது அந்த ஆலைத்தரப்பில் என்னிடம் டீல் பேசினர். அவர்கள் அணுகியபோதும், தேர்தல்செலவுக்காக எனக்கு பணம் கொடுத்த போதும் மறுத்தவன் நான்.

அன்றைய கால கட்டங்களில் மாநிலத்தில் திமுக, அதிமுக மற்றும் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுகளே இந்த ஆலை இயங்க ஒப்புதல் அளித்தனர். ஆனால், இன்று பாதிப்புஇருக்கிறது என்றால் ஏன் வந்தது, எப்படிவந்தது, எனச் சரி கட்ட வேண்டியது உள்ளது. 


ஸ்டெர்லைட் ஆலையுடன் ஊசிமுனை அளவு கூட எனக்குத் தொடர்பு கிடையாது. உண்ணாவிரதம் இருந்து தோற்றுப்போனவன் நான். இந்த விவகாரத்தில் மாநில அரசு கவனித்துக்கொண்டு இருக்கிறது. அவர்கள் என்ன செய்கிறார்கள் எனச் பார்ப்போம்.

 ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உண்மையான பிரச்னை என்ன என்பதை மாநில அரசு கண்டுபிடிக் கட்டும். கூடங்குளம் திட்டம் வருவதற்கு முன்பு போராடிய நான், திட்டம்வந்த பிறகு அந்தத்திட்டம் வர வேண்டும் என்றே நான் கூறினேன்.

 ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களின் கவலையைப் பற்றியும் அரசு தனிக் கவனம் கொள்ள வேண்டும். தமிழகத்தில் எந்தத் திட்டமும் நடைபெறக்கூடாது என்பதில் மிகக் கவனமாகவும், மிகக்கொடூரமாகவும் ஒருஇயக்கம் வேலை செய்து கொண்டு இருக்கிறது.

  வளர்ச்சித் திட்டங்களை தடுப்பதில் பயங்கரவாத இயக்கங்களின் பின்னணி உள்ளது. தமிழகஅரசு இந்த விவகாரத்தில் மிகக் கவனமாகச் செயல்பட வேண்டிய காலகட்டம் இது. ஜனநாயகத்தை மீறிய ஒருசக்தி தமிழகத்தில் வந்து கொண்டு இருக்கிறது. யாரால் அவர்களுக்கு ஆபத்துவருகிறதோ அவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உள்ளப் பூர்வமான ஆய்வை நடத்தி தடுக்ககூடிய நடவடிக்கையை எடுக்கவேண்டும். பாதிப்பு இல்லை என்றால் மக்களுக்காக இருக்கக்கூடிய அரசு பாதிப்பு ஏற்படாதவகையில் பார்க்கக்கூடியது கடமை, உத்தரவாதம் அளிக்கிறோம் எனக்கூற வேண்டியது அரசின் பொறுப்பு" என்றார்.

Leave a Reply