"பொலிவுறு நகரங்கள்' (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்துக்கு ஒதுக்கப் படும் நிதியை, உள்ளாட்சி அமைப்புகள் வேறு எந்த திட்டங்களுக்கும் பயன்படுத்தக்கூடாது என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.


 "பொலிவுறு நகரங்கள் திட்டம்; அடுத்தகட்டமுயற்சி' எனும் தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:


 பொலிவுறு நகரங்கள் திட்டத்துக்கு வரையறுக்க ப்பட்ட விதி முறைகளின் படிதான் இதற்கான நகரங்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. இதில் அரசியல் செய்வதற்கு துளி கூட இடமில்லை. இதற்கு சத்தீஸ்கர், கோவா போன்ற பாஜக ஆட்சி புரியும் மாநிலங்களை சேர்ந்த நகரங்கள் எதுவும் இத்திட்டத்தில் இது வரை இடம் பெறவில்லை என்பதே சான்றாகும்.


 பொலிவுறு நகரங்கள் திட்டம் வெற்றியடைய மாநகராட்சி, பேரூ ராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக பங்களிப்பும், பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும். மேலும், இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்படும் நிதியை உள்ளாட்சி அமைப்புகள், பிறதிட்டங்களுக்கு பயன்படுத்த கூடாது.


தற்போது இத்திட்டத் தின்கீழ் முதல் கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 20 நகரங்களும் திட்டப்பணிகளை, வரும் ஜூன் 25ஆம் தேதிக்குள் தொடங்கவேண்டும். அன்றுதான் இத்திட்டத்தை மத்திய அரசு தொடங்கி ஓராண்டு நிறைவுபெறுகிறது என்றார் அவர்.

Leave a Reply