ஐதராபாத் பல்கலைக் கழக மாணவர் ரோகித் கடந்தமாதம் தற்கொலை செய்தவிவகாரம் தேசிய அளவில் பெரும்சர்ச்சையை உருவாக்கியது.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். டெல்லி, சென்னை, பெங்களூர், மும்பை நகரங்களிலும் ஸ்மிருதி இரானிக்கு எதிராக போராட்டம் நடத்தபட்டது.

இதனால் ஸ்மிருதி இரானிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுஇருப்பதாக உளவுத் துறை கூறியுள்ளது. மாணவர்கள் அவர்மீது திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானிக்கு பாதுகாப்பை அதிகரிக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. மத்திய காபினெட் மந்திரி என்ற முறையில் தற்போது அவருக்கு ‘‘ஒய்’’ பிரிவு பாதுகாப்பு வழங்கபட்டு வருகிறது.

இனி அவருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கலாம் என்று மத்தியஅரசு ஆலோசித்து வருகிறது. ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப் பட்டால் 20 கமாண்டோ வீரர்கள் பாதுகாப்புக்கு வருவார்கள்.

Leave a Reply