நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீதேவி தன்குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந் ததாகத் தெரிகிறது. இந்தத்தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார். இந்தமரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர்.

நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள மோடி ‘நடிகை ஸ்ரீ தேவியின் மறைவு வருத்தமளிக்கிறது. இந்திய திரைத் துறையில் மூத்த நடிகையான ஸ்ரீதேவி பல அழுத்தமான கதாபத் திரங்களில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அவை எப்போதும் மனதில் நிற்கும். அவரை பிரிந்துவாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுருக்கிறார்.

நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல்தெரிவித்துள்ள குடியரசு தலைவர் ‘நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. அவரின் பிரிவு கோடிக் கணக்கான ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தமளிக்கும். அவர் நடித்த மூன்றாம்பிறை, இங்கிலீஷ் விங்கிலீஷ் உள்ளிட்ட திரைப்படங்கள் மற்ற நடிகர்களுக்கு ஊக்கமாக அமையும்’ என்றுக் குறிப்பிட்டுள்ளார். 

 

Leave a Reply