இலங்கையில் சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்குவிட்ட துறைமுக ஒப்பந்தம் ரத்து : இலங்கை அரசு அறிவிப்பு

கொஞ்சமும் எதிர்பாரா ஆச்சரியாமன விஷயம் இது, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இது இன்ப அதிர்ச்சி, சீனாவுக்கு சாவுக்கு ஒப்பான அதிர்ச்சி

தென்னிலங்கையில் ஹம்பந் தோட்டா எனும் இடத்தில் சீனா துறைமுகம் கட்டி தன்பொறுப்பில் எடுத்தது அதில் சீன கப்பல்களுடன் சீன ராணுவ கப்பல்களும் நிற்கும், அமெரிக்கா தன் கப்பலோடு அடிக்கடி அங்கு சென்று இதுவும் கப்பல்தான் உள்ளேவிடு என தகறாறு எல்லாம் செய்யும்

சீனா அதை மிக நன்றாக பிடித்து வைத்திருந்தது, கடந்தமாதம் கூட ஒரு சில உளவு கப்பலை சீனா இலங்கைக்கு கொடுத்திருந்தது. அதுவும் அப்பக்கம் சுற்றுகின்றது

இந்நிலையில் சீனாவுக்கான ஒப்பந்தம் ரத்து என கொழும்பு அறிவித்திருக் கின்றது, இத்தகவலை கொழும்பு நிதிஅமைச்சு அறிவித்துள்ளது

கோத்தபாய டெல்லியில் இருக்கும்பொழுது இந்த அறிவிப்பு வந்திருப்பது சீனாவுக்கு இந்தியா கொடுத்த அடி

இந்ததுறைமுகம் மகிந்த காலத்தில் அதாவது இந்தியாவில் காங்கிரஸ் அரசு இருந்தபொழுது சீனாவுக்கு கொடுக்க பட்டது, அதை தடுக்க காங்கிரஸ் அரசு நினைக்கவில்லை

மோடி அரசு அதைசெய்து மீட்டிருகின்றது, இலங்கையில் இந்திராவின் நிலைப்பாட்டை மன்மோகன்சிங் எடுக்கவில்லை மோடி செய்திருக்கின்றார்.

ஆக பாட்சா படத்து கல்லூரிகாட்சி போல் கெத்தாக வந்தார் கோத்தபாய, மோடி என் பெயர் மோடி எனக்கு இன்னொரு பெயர் இருக்கு என சொன்னவுடன் வியர்த்து விறுவிறுத்து “அண்ணே. சீனாவாண்ணே.. இப்போ விரட்டிரலாம்ணே.. அண்ணே அது உங்க நாடுண்ணே.. பூரா உங்களுக்குண்ணே” என சொல்லி கொண்டிருக்கின்றார் கோத்தபாய‌

நிச்சயம் மோடி அரசின் மிகசிறந்த ராஜதந்திரம் இது, அப்படி என்ன சொல்லி கோத்தபாயவினை வழிக்கு கொண்டுவந்திருப்பார்கள் என்பது தெரியவில்லை, ஆனால் மகா சக்திவாய்ந்த ஆயுதம் ஒன்றை இந்தியா காட்டி மிரட்டி இருக்கலாம்

தும்பிகள் அது சீமான் என உற்சாகமாக சொல்லும் என்பது வேறுவிஷயம், அப்படி சொன்னால் கோத்தபாய உருண்டு புரண்டு சிரித்துவிட்டு சென்றிருப்பான், சீனா வெளியேறியிருக்காது

விஷயம் வேறு எங்கோ இருக்கின்றது, விரைவில்கசியும் அப்பொழுது உங்களுக்கு அறிய தருவோம்

மிக பெரும் சாதனையினை மோடி செய்திருக்கின்றார், நிச்சயம் தேசத்துகான நல்ல விஷயம் இது, இலங்கையில் இந்தியாதன் பிடியினை இறுக்கி வைத்திருக்கின்றது

அப்படி என்ன சொல்லியிருப்பார் மோடி, கேட்டால் “ஹா ஹா ஹா உண்மை சொன்னேன்” என ரஜினி ஸ்டைலில் சொல்வார்

அந்த உண்மை மெதுவாக வரும்,

அடுத்து என்ன? ரஜினியின் பாஷா பாடலை மோடிக்கு பாட வேண்டியதுதான்

“ஏ மோடி பாரு, பாரு
கொழும்பில் இவன் பேரை சொன்னா
இந்து கடல் கத்தும் பாருடா…”

நன்றி ஸ்டாண்லி ராஜன் 

Comments are closed.