ஹரியானா சட்ட சபை பாஜக எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராக மனோகர் கட்டார் தேர்வு செய்யப் பட்டுள்ள நிலையில் அவர் நாளை முதல்வராக பதவியேற்று கொள்கிறார். துணை முதல்வராக துஷ்யந்த்சவுதாலா பதவியேற்கிறார்.

மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளில் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும் வெற்றிபெற்றது. ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

ஹரியானாவில் ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவைப்படுகிறது. தற்போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாததால் எந்தகட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் இழுபறி நீடித்துவருகிறது.

இந்த நிலையில் ஹரியானாவில் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரியுள்ளது. சண்டீகர் யூனியன் பிரதேசத்தில் உள்ள கெஸ்ட் அவுஸில் புதிதாக தேர்வுசெய்யப்பட்ட பாஜக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாஜக மூத்த தலைவரும், தேர்தல் பொறுப்பாளருமான அருண் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஹரியானாவில் முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டாரை சட்டசபை பாஜக எம்எல்ஏக்களின் குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.

பாஜகவும், ஜனநாயக ஜனதா கட்சியும் ஆளுநர் சத்யதியோ நாராயண் ஆர்யாவை சந்தித்து மாநிலத்தில் ஆட்ச அமைக்க உரிம கோரியது. இதை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

இதனால் முதல்வராக 2-ஆவது முறையாக மனோகர்லால் கட்டாரும் துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலாவும் நாளை மதியம் 2.15 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற் கின்றனர். அமைச்சரவையில் யார் யார் என்பது குறித்தும் நாளை அறிவிக்கப்படும்.

Comments are closed.