ஹிந்துஸ்தானத்தில் யாரெல்லாம் வாழ்கிறார்களோ, அதன் பாரம் பரியத்தை யாரெல்லாம் மதிக்கிறார்களோ அவர்களெல்லாம் ஹிந்துக்களே' என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன்பாகவத் தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம், பேதூல் நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஹிந்துமத மாநாட்டில் பங்கேற்று, அவர் பேசியதாவது:


ஹிந்துஸ்தானத்தில் (இந்தியாவில்) வாழ்பவர்கள், அதன் பாரம் பரியத்தை மதிப்பவர்கள் அனைவரும் ஹிந்துக்களே. முஸ்லிம்களின் பிரார்த்தனை முறைகள் வேறுபட்டிரு ப்பினும், தேசிய இன அடிப்படையில் அவர்களும் ஹிந்துக்கள் தான். அனைத்து ஹிந்துக்களும், ஹிந்துஸ்தானத்துக்கு பொறுப்பானவர்கள்.
உலகம்முழுமையும் இந்தியசமூகம் ஹிந்து என்றே அறியப்படுகிறது. உலகத்தின் குருவாக பாரதம் உருவெடுக்கும் என உலகமே சொல்லி கொண்டிருக்கிறது. அதற்கு பொறுப்பானவர்களாக நாம் இருக்கவேண்டும். வேற்றுமைகளை குழிதோண்டி புதைத்து விட்டு, ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
நம்மிடையே ஜாதி, சடங்கு-சம்பிரதாயங்கள், மொழி ஆகியவற்றில் வேறுபாடுஇருக்கலாம். ஆனால், நமது மனதின் மொழி ஒன்றுதான். வாழ்வில் பன்முகத்தன்மை அழகானது. ஆனால், அதில் ஒற்றுமையும் இருக்க வேண்டும் என்றார் மோகன் பாகவத்.

Leave a Reply