மகாத்மா காந்தி அவர்களின் படுகொலை குறித்த பல்வேறு விவாதங்களில், ஹிந்து மகா சபை குறித்தும், வீர் சாவர்க்கர் குறித்தும் விமர்சனம் செய்யும் இடது சாரிகள், அந்த காலகட்டத்தில் ஹிந்து மகா சபையின் தலைவராக இருந்த நிர்மல் சந்திர சாட்டர்ஜி குறித்து பேசாது இருப்பது ஏன்?

மகாத்மா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட போது, ஹிந்து மகா சபையின் தலைவராக இருந்தவர் நிர்மல் சந்திர சாட்டர்ஜீ. ஜூலை 1948ல் அவருக்கு கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக வாய்ப்பளித்தது அரசு. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட சிறிது காலத்திலேயே ஹிந்து மகா சபையின் தலைவராக இருந்தவருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது வியப்பு தானே?

14 மாதங்களில் அவர் தனது பதவியை துறந்தார். மீண்டும் ஹிந்து மகா சபையோடு தன்னை இணைத்து கொண்டதோடு, பாரில் 27-29, 1951ம் ஆண்டு நடைபெற்ற ஹிந்துமகாசபையின் சிறப்பு கூட்டத்தை முன்னின்று வழிநடத்தினார். 1952ம் ஆண்டு நடந்த முதல் பாராளுமன்ற தேர்தலில் அகில பாரத ஹிந்து மகாசபையின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார்.1957 ல் தோல்வியுற்றார். 1962ம் ஆண்டு சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியுற்றார்.

1963ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களான ஜோதிபாசு, பவானி சென், பெனோய் சவுத்திரி மற்றும் திருதிப் சவுத்திரி ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் 'பர்த்தமான்' தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967 தேர்தலிலும் கம்யூனிஸ்ட் ஆதரவோடு வெற்றி பெற்றார். உச்ச நீதிமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வழக்குகளுக்காக வாதிட்டார். 1969 மேற்கு வங்க மாநில சட்ட சபை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்காக தீவிர பிரச்சாரம் செய்தார்.

இவருடைய இளைய மகன் தான் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், வழிக்காட்டியுமான சோம்நாத் சாட்டர்ஜி.

கோட்ஸே ஹிந்து மகா சபாவில் இருந்த காரணத்தினாலேயே, வீர் சாவர்க்கர் மீதும், ஆர் எஸ் எஸ் மீதும், மகாத்மா காந்தி கொலையில் விமர்சனங்களை வைக்கும் கம்யூனிஸ்டுகளே, மகாத்மா காந்தி கொலையான போது, அதன் தலைவராக இருந்த, அதன் பிறகும் அதன் தலைவராக செயல்பட்ட, மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மல் சந்திர சாட்டர்ஜீ அவர்களை ஆதரித்து மக்களவை உறுப்பினராகி அழகு பார்த்ததற்கு காரணம் என்ன? தொடர்ந்து ஹிந்து மகா சபையின் தலைவர்கள் மீது நீங்கள் வைக்கும் விமர்சனத்தை நிர்மல் சந்திர சாட்டர்ஜீ அவர்கள் மீது சொல்லாதது என்?

மகாத்மா காந்தி மீது உங்களுக்கு (கம்யூனிஸ்ட்) இருந்த வன்மம், காழ்ப்புணர்ச்சி தான் ஹிந்து மகா சபை தலைவரை ஆதரிக்க காரணம் என்று நாங்கள் சொன்னால் அதை ஏற்பீர்களா? மகாத்மா காந்தி கொலையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொடர்பு உள்ளது என்று நாங்கள் சொன்னால், உங்களால் அதை மறுக்க முடியுமா?

கம்யூனிஸ்டுகளே உங்களின் இரட்டை வேடம், தேச துரோகம் தொடர் கதையா?

நாராயணன் திருப்பதி.

Leave a Reply