ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்குவந்த ஓராண்டில் 26,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி பெருமிதம்  தெரிவித்தார்.

ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைத்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுதையொட்‌டி, மாநில அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வியாழ கிழமை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது பேசியவர்,

2009-ல் ஆட்சிக்குவந்த காங்கிரஸ் ரூ.60,000 கோடி விவசாயக் கடன்களை மட்டுமே தள்ளுபடி செய்தது, ஆனால் ரூ.6 லட்சம் கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அது வாக்குறுதி அளித்தது.

சிஏஜி அறிக்கையில் காங்கிரஸ் அரசின் விவசாயக்கடன் தள்ளுபடி திட்டம் நடைமுறையில் விவசாயிகள் அல்லாத லட்சக் கணக்கானோருக்குச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப், ஹரியாணா தேர்தல்களுக்கு முன்பும் காங்கிரச் அரசு இதேபோன்று விவசாயக்கடன் தள்ளுபடி வாக்குறுதி அளித்தது, ஆனால் வாக்குறுதி நிறைவேற்றப்பட வில்லை.

பஞ்சாப் விவசாயிகளுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை என்பதோடு கர்நாடகாவில் 800 விவசாயிகளுக்கு அடையாள ரொக்கம்மட்டும் அளிக்கப்பட்டது.

இப்படியாக காங்கிரஸ் கட்சி தனது கடன்தள்ளுபடி விவகாரத்தில் மக்களை முட்டாள்களாக்கி வருகிறது. முந்தைய மன்மோகன்சிங் அரசும் ஒருரேங்க், ஒரு பென்ஷன் திட்டத்திற்குக் குறைந்த தொகையை ஒதுக்கி தேசத்தை தவறான புரிதலுக்கு இட்டுச் சென்றது.

ஆனால் எங்கள் அரசு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு உண்மையான அர்த்தத்தில் திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. முந்தையஅரசின் பென்ஷன் திட்டங்களில் போலிபயனாளர்கள் தொடர்பாக சுமார் ரூ.90,000 கோடி ஊழல்கள் நடந்துள்ளது. இதனை பாஜக அரசு பதவிக்கு வந்தவுடன் அம்பலப்படுத்தியது.

தேசத்தின் காவலாளி ஊழல்வாதிகளை சும்மா விடத் தயாராக இல்லை.

ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்குவந்த ஓராண்டில் 26,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மேலும், ஹிமாச்சல பிரதேசத்தில் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக அரசின் சாதனைகள் மற்றும் பணிகளை பாஜக பட்டியலிடும்வகையில், பல்வேறு சாதனைவிளக்க நிகழ்ச்சிகளுக்கும் மாநில அரசு ஏற்பாடுசெய்திருந்தது. பிரதமர் மோடி தலைமையில், தர்மஷாலாவில் பொதுமக்கள் பங்கேற்ற பேரணி நடத்தப்பட்டது. மாநில அரசுத் திட்டங்களில் பயனடைந்த மக்களுடனும் அவர் கலந்துரையாடினார்.

Tags:

Leave a Reply