புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஆராயாமலேயே அந்ததிட்டத்தை எதிர்ப்பவர்கள் என்ன விஞ்ஞானிகளா? என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இயற்கை எரி வாயு எடுக்க ஜெம் நிறுவனத்துக்கு மத்தியஅரசு கடந்த 14-ஆம் தேதி அனுமதி அளித்தது. இந்தத்திட்டத்தால் விவசாய நிலங்கள் நாசமாகும், அப்பகுதி வாசிகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என கூறி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு நெடுவாசல் மக்கள் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசின் திட்டம்குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், ஒருதிட்டத்தையும் ஆராயாமல் ஆள் ஆளுக்கு எதிர்க்கிறார்கள். இவர்கள் என்ன விஞ்ஞானிகளா? ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மக்கள் விரும்பவில்லை என்றால் அந்தத்திட்டம் செயல்படுத்தப் படாது. தமிழகத்தில் பெய்யும் மழைநீரை சேமிக்காமல் கடலில் சென்று வீணாக கலக்கிறது. இதற்கு மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? தமிழகத்துக்குவரும் லட்சுமியை ஏன் வேண்டாம் என்று சொல்லவேண்டும் என்றார்

Leave a Reply