தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்குவந்தவுடன் ஹைதராபாத் நகருக்கு பாக்யநகர் என பெயர் மாற்றுவோம்; நகரில் பயங்கர வாதத்தை வேரறுப்போம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.


தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அங்கு பிரசாரம் மேற்கொண்டுள்ள யோகி ஆதித்ய நாத் பழைய ஹைதராபாத் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:


நமது நாட்டில் நடைபெற்றுள்ள அனைத்து பயங்கரவாதத் தாக்குதல்களிலும் ஹைதராபாத் நகரம் ஏதோ ஒருவகையில் தொடர்பில் இருந்து வருகிறது. ஏனெனில், இங்கு பயங்கரவாத ஆதரவாளர்களும், அதற்கு உதவு பவர்களும் உள்ளனர். தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ஹைதராபாத் நகரை பயங்கரவாதத்தின் பிடியில் இருந்துமீட்போம். காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகளுக்கு சுதந்திரம் அளித்திருந்தனர். இப்போது, மத்தியில் நடைபெற்று வரும் பாஜக ஆட்சியில் பயங்க ரவாதிகள் முற்றிலுமாக ஒடுக்கப் பட்டுள்ளனர். பயங்கரவாதம் எங்கு தலை தூக்கினாலும் துப்பாக்கி குண்டுகள்தான் அவர்களுடன் பேசி வருகிறது.


தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைத்தவுடன் ஹைதராபாத் நகருக்கு பாக்ய நகர் என புதிய பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தை அமைதிப் பூங்காவாக்கி வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்வோம். காங்கிரஸ் ஆட்சியில் வாக்கு வங்கியை மனதில்கொண்டு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கூட கடும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். அதுதான் நாட்டில் பலகுண்டு வெடிப்புகளுக்கும், அப்பாவி மக்கள் உயிரிழப்புக்கும் காரணமாக அமைந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் தவறு செய்பவர்கள் அஞ்சி ஓடும் நிலையை ஏற்படுத்தி யுள்ளோம். இதனை யாராவது மறுக்கமுடியுமா? என்று யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.