நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களில் யாரேனும், தேவர்களாக இருக்கக்
கூடும். அதனால் அவர்களை நல்ல முறையில் உபசரிப்பது நமது முதற் கடமை. இது சாதாரண விருந்தினர்களுக்கே என்றால், 'தேவாதி தேவனே… ஸ்ரீ மஹா விஷ்ணுவே…. அதிதியாக, பூலோக வைகுந்தமான, 'ஸ்ரீரங்கத்திற்கு வந்தால்…………?!


'கங்கையை விடச் சிறந்த தீர்த்தம் இல்லை, விஷ்ணுவைவிடச் சிறந்த தேவனில்லை, தாயிற் சிறந்த கோயிலோ, காயத்ரியை விட உயர்ந்த மந்திரமோ, ஏகாதசியைவிடச் சிறந்த விரதமோ", இல்லை என, பதினெண் புராணங்களிலும், சிறந்த 'பத்மபுராணம்", இந்த ஏகாதசி வரலாறை மிக
உயர்வாக, விரிவாக உரைக்கிறது.

ஏகாதசி என்பது ஓர் புண்ணிய காலம். பரமாத்வாவுக்கு பிரியமான திதி அது. அறு வயது முதல் அறுபது வயது வரை அனைவரும் அனுஷ்டிக்க வேண்டும் என பகவான் கூறியுள்ளார். கார்த்திகை தினத்தில் 'திருமங்கை மன்னன்" 'நம்மாழ்வார்" பாடிய, 'திருவாய் மொழிப்" பாடல்களைப் பாடினார். அது கேட்டு மகிழ்ந்த அழகிய மணவாளன் (ஸ்ரீரங்கன்) திருமங்கை மன்னனிடம், என்ன வேண்டும் எனக் கேட்க, அவர், தனக்கேதும் வேண்டாம், திரு அத்யயன உற்சவத்தில், வேதங்களைக் கேட்டு நீர் மகிழ்வது போல, 'தமிழ்மொழியில் நம்மாழ்வார் அருளிய, திருவாய் மொழிப் பாடல்களையும் கேட்டருள வேணும், என விண்ணப்பிக்க, எம் பிரானும் அதற்கு இசைந்தார்.

இவ்வாறு 'நம்மாழ்வாருக்குப்" பெருமை சேர்த்த 'திருமங்கை ஆழ்வாருக்கு" பெருமை சேர்க்க, 'நாதமுனிகள், திரு மொழிப் பாடல்களையும், மற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த (பாடி ய) பாடல்களையும், பெரிய பெருமாள் கேட்டருள எண்ணி, 'பகல் பத்து உற்சவம்" எனப் பெயரிட்டு கொண்டாடச் செய்தார். இசை, நாடக, அபிநயங்கள் சேர்ந்த முத்தமிழ்க்கலையாக, திவ்யப்பிரபதங்களை விண்ணப்பிக்கும் (பாடும்) முறையே இந்தப் பெரும் விழா

இதுவே நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கும், அதைப் பாடிய ஆழ்வார்களுக்கும் ஏற்றமிகு 'திருஅத்யயன (வைகுந்த ஏகாதசி) உற்சவம் ஆகும். இந்த திவ்யப்பிரபந்த  மகோத்ஸவத்தில், பன்னிரு ஆழ்வார்கள் பாடிய திராவிட வேதமாகிய – தமிழ்ப் பாசுரங்களைக் கேட்டு திவ்யப் பிரபந்த உற்சவத்தில் ஸ்ரீ நம் பெருமாள் மகிழ்வதாக ஐதீகம்!

இது திருமங்கை ஆழ்வார் காலம் முதல் நடை பெறுகிறது. பாஞ்சராத்ர ஸம்ஹிதைப்படி, தனுர்மாத (மார்கழி) சுக்லப் பிரதமை முதல், கிருஷ்ணப் பஞ்சமி முடிய பதது நாட்கள் உற்சவமாகும். சாதாரண கோவில் கொண்டாட்டங்களை உற்சவம் என்பர். 108 திருப்பதிகளில், முதலாவதும், பெரிய கோவிலும், பூலோக வைகுந்தம் என்பதாலும், இந்த ஏகாதசி – வைகுந்த ஏகாதசி, " மஹோத்ஸவம்" ஆகும்.

ஸ்ரீரங்கத்தில் மிக விசேஷமாக, கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு " பக்தி வைபவம்" . இதில் சாதி, மத, பேதங்களே இல்லை! கண் உள்ளோர் அனைவரும் கண்டு களிக்கலாம்!. இந்த நாளைப் போற்றாத புரா ணமோ, தர்ம நூல்களோ இல்லை. இது 'திரு நெடுந்தாண்டகத்துடன்" – பத்து நாட்களுக்கு, 'பகல் பத்து திருமொழி", என அரயர்கள் (பாடுபவர்கள்) அபிநயத்துடன், ஆரம்பம். மூலவர்க்கு, முத்தங்கி சேவையும், ஆரம்பம். பாண்டியர் கால, முதல்தர கொற்கை முத்துக்களால், நீலநிற வெல்வெட்டில் கோர்க்கப்பட்ட, நீளமான அங்கி அரங்கனுக்கு! இந்த கண் கொள்ளாக் காட்சியை பத்தொன்பது நாட்களுக்கு (19) சேவிக்கலாம்.

தொடரும் …..

நன்றி; ரேவதி

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.