ஸ்ரீரங்கம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக சுப்பிரமணியம் போட்டியிடுகிறார்.மொத்தம்  34 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அதிமுக., திமுக., பா.ஜ.க, வேட்பாளர்களிடையேதான் உண்மையான போட்டி நடக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வர இருக்கிற சட்டமன்ற

தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்ததேர்தல் எதிர்பார்க்கப்படுவதால் ஒவ்வொரு கட்சியும் தங்கள் பலத்தை காட்ட வரிந்து கட்டி நிற்கின்றன.

பா.ஜனதா தரப்பில் தேர்தல் பணிக்குழு, தலைவர்கள் பிரசார பயண திட்டம் இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்பட்டு விடும் . தமிழிசை சவுந்தரராஜன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார். ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றிபெற திருப்பதியில் பிரார்த்தனை செய்து பிரசாரதிட்டத்தை வகுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தலைவர்களின் சுற்றுப் பயண திட்டம் இன்று மாலையில் முடிவு செய்யப் படுகிறது. இன்றும், நாளையும் ஸ்ரீ ரங்கத்தில் ஊழியர்கள் கூட்டம் நடக்கிறது. தலைவர்கள் பிரசாரம் பெரும்பாலும் 1 அல்லது 2–ம் தேதியில் இருந்து தொடங்கும் என தெரிகிறது.

Leave a Reply