இந்தத் தலைப்பிலான புராண இதிகாச பாத்திரப் படைப்புகள் பற்றிய பதிவுகள் நண்பர்களால் வரவேற்பைப் பெற்றாலும் இந்தப் பதிவுகளை அவ்வப்போது வெவ்வேறு தளங்களில் தரவேண்டும் என்று நினைத்து கொஞ்சம் மாற்றிக் கொள்கிறேன்!!! ஆனால் பல புராண இதிகாச வேதகாலப் பாத்திரங்களின் பதிவுகளும் கலந்தே வரும்!!!

நாம் விஞ்ஞான புத்தகங்களில் ஆங்கில எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்ன் எழுதிய மனிதன் நிலவுக்குப் போகும் கற்பனை பற்றிய புத்தகம் மற்றும் அது நனவானது பற்றியும் படித்திருப்போம்!! எதற்கெடுத்தாலும் வெளிநாட்டு விஷயங்களையே புகழும் நமது மனப்பான்மையாலும் நமது மதத்தில் உள்ள அற்புதமான விஷயங்கள் நமக்கு வெளிப்படுத்தப் படாமல் இருப்பதாலும் நாம் இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறோம்!!! உண்மையில் ஜூல்ஸ் வெர்னின் காலங்களுக்கு வெகு காலம் முன்பே இந்திய ரிஷிகளாலும் முனிவர்களாலும் பெரும் விஞ்ஞானப் புதையல்கள் நமக்கு அளிக்கப்பட்டு உள்ளன!!! நாம் அதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டே இந்தப் பதிவுகள்!!!

மூவாயிரம் ஆண்டுகள் முன்பு இருந்த பரத்வாஜ மகரிஷியை உலகின் முதல் விஞ்ஞானி என்று நாம் நெஞ்சு நிமிர்த்தி சொல்லலாம்!!! ஆம் அவர் உண்மையில் விஞ்ஞானியாக இருந்த ரிஷிதான்!!

அவருடைய முக்கியப் படைப்பு ‘யந்திர சர்வாசா’என்னும் நூல்!!! இது இன்றைய ஆங்கில ‘THEORY OF MACHINES’ என்னும் புத்தகத்துக்கு ஈடானது!!! அதையும் விட மேம்பட்டது!! இந்த நூலின் பெரும்பகுதிகள் கிடைக்கவில்லை!! இந்த நூலின் ஒரு அங்கமாக நமக்குக் கிடைத்துள்ள நூல் ‘வைமானிக சாஸ்த்ரா’ என்னும் நூல்!! இது ஒன்றுமில்லை!! இன்றைய ‘ A BOOK OF AERONAUTICS ‘ ஆகும்!! இந்நூலும் கூட நமக்கு முழு அளவிலும் கிடைக்காமல் காலப்போக்கில் காணாமல் போய் சுமார் 3000 சுலோகங்கள் என்ற அளவிலேயே கிடைத்து உள்ளது!!! இந்த நூலில் பல வேறு விதமான ஆகாய விமானங்கள் மற்றும் அதன் வடிவமைப்பு , இயக்கம் பற்றிய பல தகவல்களும் உள்ளன!!! அவை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்!!!

தொடரும்,,,,,,

நன்றி #TREASURES_OF_HINDUISM
#Dhrona_charya

Leave a Reply