ஜம்மு-காஷ்மீரில், பாஜக – மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) கூட்டணி அரசு மார்ச் மாதம் 1-ம் தேதி பதவியேற்க கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பாஜக, பிடிபி வட்டாரங்கள் கூறியதாவது:

பிடிபி நிறுவன தலைவர் முஃப்தி முகமது சயீது, 6 ஆண்டுகளுக்கும் முதல்வராக நீடிப்பார். பாஜக.,வின் நிர்மல்சிங் துணை முதல்வராக பதவியேற்க கூடும்.

பிடிபி வசம் உள்துறை, நிதி அமைச்சகங்களும், பாஜகவுக்கு சுற்றுலா, நீர்வளம், பொது சுகாதாரம் உள்ளிட்ட அமைச்சகங்களும் ஒதுக்கப்படக் கூடும். இது தொடர்பாக, பிடிபி தலைவர் மெஹ்பூபா முஃப்தி இன்று (பிப்.24) புது தில்லி வந்து பாஜக தலைவர் அமித் ஷாவை சந்திக்கிறார். இதனை தொடர்ந்து, அடுத்த சிலநாள்களில் முஃப்தி முகமது சயீது, பிரதமர் மோடியை சந்திப்பார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply