மோடியின்  ராஜ்ஜியம் ராம ராஜ்ஜியம்  1கடந்தவாரம் பணி நிமித்தமாக குஜராத் போயிருந்தேன், மோடி மீதும் பாஜக மீதும் சேற்றைவாரி இறைக்கும் "மீடியாவும்,, காங்கிரசும் சொல்லுவது உண்மை தானா? என்பதை கண்ணால் கண்டுவிட வேண்டும் என்பதை மனம் சொல்லிக் கொண்டிருந்தது.

குஜராத் தலைநகர் ஆமதாபாத் விமான நிலையத்தில் இறங்கியது முதல். ஒவ் வொரு வினாடியையும் பயன்படுத்திக் கொள்ள முடிவுசெய்தேன். கண்ணால் காண்பதேல்லாம் மனதுக்குள் "போட்டோ" பிடித்து வைத்துக் கொண்டேன்.தங்குமிடம் செல்ல "ஆட்டோவையே".. தேர்வுசெய்தேன். பேச்சு கொடுக்கலாமல்லவா?. ஊர்நிலவரம் தெரிந்து கொள்ளலாமல்ல வா?

"மஹிந்தர் ராஜ்புட்"..ஆட்டோ வாலா (அங்கு அப்படித்தான் நாம கரணம்),பேசுகிறார் "மோதி ராஜ்ஜியத்தில் ( குஜராத்தில் "மோடியை "மோதி" என்று தான் உச்சரிக்கிறார்கள் ) நாங்கள் சுதந்திரமாக ஆட்டோஓட்ட முடிகிறது ஒரு பகுதியி லிருந்து முன்னமெல்லாம் நினைத்தபோது செல்ல முடியாது. மாதத்தில் பாதிநாள் "ஊரடங்கு உத்தரவு—144 தடை " இருக்கும் சிலபகுதிகளில் இந்த தடை மாதக் கணக்கிலும் நீடிக்கும் அதனால் எங்களுக்கு ஓட்டம் இருக்காது வருமானம்இருக்காது.அதெல்லாம் இப்போது "பழங் கதை" மீண்டும் இந்ததேர்தலில் "மோதிதான்" ஜெயிப்பார் . அதுவும் பெரும்மெஜாரிட்டியோடு ஏனெனில் அவர் தான் எங்களுக்கு பாதுகாப்பு.  ஆரம்பமே நல்லாஇருக்கே, போகப் போக எப்படி இருக்கும் என்று ஆர்வம் அதிகரித்தது. பார்த்து விடுவோம் என்று தங்குமிடத்துக்கு வந்தவுடன் ஓட்டல் காரரை கேட்டேன்,

24 மணிநேரமும் தரமான மின்சாரம்.( லோவோல்டேஜ் இல்லை) எங்கள் ஓட்டலில் யுபிஎஸ், இல்லை ஜெனெரெட்டர் இல்லை 24 மணி நேரமும் பைப்பை திருகிணால் தண்ணீர் , அதும் குடிதண்ணீர்.மோதி சாப் வந்தவுடன் நாங்கள் நிம்மதியாக உள்ளோம். அரசு அதிகாரிகளிட மிருந்து எந்த தொந்தரவும் இல்லை.."

நான் நாடுமாறி போய் விட்டேனா? இல்லை கனவுகண்டு கொண்டிருக்கிறேனா? கிள்ளிப்பார்த்துக் கொண்டேன். மனம் சும்மா இருக்கவிடவில்லை. சாலையில் சென்று ஒரு பாணி பூரி வாலாவை பார்த்தேன் கேட்டேன் கேள்விக் கணைகளை தொடுத்தேன்..
"நான் ராஜஸ்தானைசேர்ந்தவன்,குஜராத் வந்து இருபது வருடமாகிறது , எனக்கு இரண்டு பெண்குழந்தைகள், பள்ளியில் படிக்கிறார்கள் படிப்ப, புத்தகம, சீருடை மதியஉணவு இலவசம்..(நம்மூர் பாஷைபடி "விலையில்லா") தற்போது அரசே "இலவச ஸ்கூல் பஸ்" மூலம் குழந்தைகளை வீடு தேடி வந்து கூட்டிப் போகிறது.." மோதி வந்தபிறகு சாலையில் வியாபாரம்செய்யும் என்னிடம் இதுவரை எந்த காவல்துறையும் "கை நீட்டியதில்லை"

சலைவியாபாரிகள் ரோட்டை ஆக்கிரமிக்காமல். அசுத்தப் படுத்தாது வியாபாரம் செய்தால் மோதி அரசு ஒன்றும்செய்யாத, குஜராத்தில் வெளி மாநிலத்துக்காரர்கள் நிம்மதியாகவாழ முடிகிறத இந்ததேர்தலில் வெளிமாநில ஓட்டுக்கள் சனைத்தும் மோதிக்குத்தான் என்று கொட்டித்தீர்த்தார்.

ஆஹா நரிமுகத்தில் முழித்து விட்டுத்தான் ஆமதாபாத்துக்கு விமானம் ஏறினோம் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.படுக்கப் போகும் முன் ஒருகிளாஸ் தூத்(பால்) ஆர்டர்செய்தேன். வந்தது ஒரு கண்ணாடிடம்ளரில் சுமார் அரைலிட்டருக்கு பக்கமிருக்கும். குடித்தால் கிளாஸிலிருந்து பால் வெளியெவர வெட்கப்பட்டது. அவ்வளவு "திக்" கள்ளிச் சொட்டாய் அமுல் தந்த தேசம் அல்லவா. பாலுக்கு என்னகுறைச்சல்.

அடுத்தநாள் என் வேட்டையை தொடர்ந்தேன், இந்த முறை நம் தமிழ்நண்பர்களை பார்த்து விடுவதென்று, ஆமதாபாத் தமிழ்ச் சங்கத்தலைவர் ஆசிரியர் திருநாவுக்கரவை சந்தித்தேன். அவர் பல தமிழ் தலைவர்களிடம் நம்மை அழைத்துச்சென்றார் குஜராத்தின் தமிழ்க்குரல் எப்படி இருக்குமோ என்று பயந்தேன் ஆனால்_பார்த்தவுடன் கேட்டவுடன வியந்தேன.

Tags:

Leave a Reply