தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த தீவிரம் காட்டி வரும் பா.ஜ.க மேலிடம், சமீபத்தில் தமிழகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை தொடங்கியது. இதற்கிடையில், உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு சென்னையை அடுத்த பூந்தமல்லியில் இன்று பயிற்சி முகாம் நடந்தது.

இது குறித்து கூறிய தமிழிழிசை சவுந்தரராஜன், "மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் காலதாமதமாகத்தான் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆர்வத்துடன் உறுப்பினர்களாக சேர்ந்து வருகிறார்கள்.

கடந்த ஒரு மாதத்தில் 4½ லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளார்கள். 60 லட்சம் பேரை உறுப்பினராக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்துக்குள் இந்த இலக்கை எட்டுவோம்.

உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த சட்டமன்ற தொகுதிக்கு ஒருவர் வீதம், 234 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முழுநேர ஊழியர்களாக செயல்படுவார்கள்.

இந்த 234 பேருக்கும் தான் இன்று பயிற்சி அளிக்கப்பட்டது. பா.ஜனதாவின் செயல்பாட்டை மக்கள் மத்தியில் எடுத்து சொல்லி அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்பது எப்படி? என்று அவர்களுக்கு விளக்கி உள்ளோம்.

உறுப்பினர் சேர்க்கையில் தினசரி ஏற்படும் முன்னேற்றம் குறித்து கட்சி தலைமை அலுவலகம் கண்காணித்து வருகிறது. குறிப்பிட்ட இலக்கை எப்படியும் மார்ச் 31–ந் தேதிக்குள் எட்டி விடுவோம்." என்று தெரிவித்தார்.

Tags:

Leave a Reply