பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 10 சதவீதம் இடஒதுக்கீட்டு மசோதாவை வரும் கல்வியாண்டில் இருந்து அமல்படுத்த அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

புனேயில் நிருபர்களை சந்தித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்தியஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை, வரும் கல்வியாண்டில் அமல்படுத்தவேண்டும் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நேற்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம். இதனை அமல்படுத்த வேண்டும் என அனைத்து மாநிலங்களையும் கேட்டுகொண்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply