பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகிவரும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி நாடெங்கும் முக்கிய நகரங்களில் நடக்கும் பிரசார பொதுக் கூட்டங்களில் பேச உள்ளார்.

குறிப்பாக உத்தர பிரதேசத்தில் அதிக கவனம்செலுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

உ.பி.,யில் மொத்தம் 10 நகரங்களில் பிரசாரம்செய்ய மோடி முடிவுசெய்துள்ளார். இரண்டு கட்டங்களாக இந்தபிரசாரம் நடைபெற உள்ளது.

அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்கி டிசம்பர்வரை அவர் 5 நகரங்களில் நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்கிறார். இந்த தேர்தல் பிரசாரத்தை அவர் காசி அல்லது மதுராவில் தொடங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

நரேந்திர மோடியின் இரண்டாவது கட்ட உத்தரபிரதேச பிரசாரம் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் ஆக்ராநகரில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 10 பொதுக் கூட்டங்களுக்கான தேதிவிவரம் விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உத்தர பிரதேசத்தில் நரேந்திரமோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக் கூட்டங்கள் மக்கள் மத்தியில் எழுச்சியை உருவாக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Leave a Reply