10 லட்சம்  பேரை திரட்டும் பீகார் பாஜக  பா.ஜ.க , பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திரமோடி, இம்மாதம், 27ம் தேதி, பீகார் தலைநகர் பாட்னாவில் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர் என அம்மாநில பாஜக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மாநில சட்டசபையின் எதிர்க் கட்சித் தலைவரும், பா.ஜ.க, மூத்த தலைவருமான, நந்த்கிஷோர் யாதவ் கூறியதாவது:

மோடியின் கூட்டத்திற்கு, 10 சிறப்புரயில்கள் அமர்த்தப்பட்டுள்ளன. மாநிலத்தின் பலமுக்கிய நகரங்களில் இருந்து, பாட்னாவுக்கு வந்துசேரும் வகையில், ரயில்கள் இயக்கப்படும். மோடியின் கூட்டத்திற்கு இதுவரை வந்த கூட்டத்தைவிட, பாட்னா கூட்டத்திற்கு அதிகளவில் வருவர். இதற்காக விமரிசையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேடை அமைக்கும்பணி, நடைபெற்று வருகிறது.

கூட்டத்திற்கு கட்சியினரை அழைத்துவர, சிறப்புரயில்கள் வாடகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. இப்போதைக்கு, 10 ரயில்களை அமர்த்தியுள்ளோம். ஒவ்வொரு ரயிலிலும், 18பெட்டிகள் இணைக்கப் பட்டிருக்கும்.

500க்கும் அதிகமானபஸ்கள் அமர்த்தியுள்ளோம். பீகாரில் பஸ்கள் போதியளவில் கிடைக்காததால், ஜார்க்கண்ட் மற்றும் உ.பி.,யிலிருந்து கொண்டுவர உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply