சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளை அடக்க 10ஆயிரம் கூடுதல் துணை ராணுவவீரர்கள், 2 கூடுதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் 2 ஆயிரம் என்ஜினியர்களை தீவிரவாதத்திற்கு எதிரானகுழுவில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் இதுகுறித்து டெல்லியில் நடந்த கூட்டத்தில் இணை அமைச்சர் கிரண்ரெஜ்ஜு, மத்திய உள்துறை செயலாளர் அனில்கோஸ்வாமி, துணை ராணுவ தலைவர்கள், மூத்த தலைவர்கள், திட்டகமிஷன் தலைவர், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக அதிகாரிகள், தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மாவோயிஸ்டுகளை அடக்குவது குறித்து ஆலோசித்தனர்.

மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமுள்ள சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்திற்கு அடுத்த 3 முதல் 4 மாதங்களில் 10 ஆயிரம் துணைராணுவ அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று உள் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சத்தீஸ்கரில் முன்னேற்ற பணிகளை மேற்கொள்ள 2ஆயிரம் என்ஜினியர்கள் தொழில் நுட்ப வல்லுனர்கள் வருகிறார்கள். மேலும் 2 ஹெலிகாப்டர்களும் சத்தீஸ்கருக்கு மத்திய அரசால்வழங்கப்படுகிறது.

Leave a Reply