டெல்லியில் இலவச குடி நீர் வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி அரசு அறிவித்த ஒருமாதத்துக்குள் 10% குடிநீர் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ந் தேதி குடிநீர் கட்டணத்தை 10% உயர்த்துவதற்கான முன் மொழிதலுக்கு டெல்லி குடிநீர் வாரியம் ஒப்புதல்பெற்றிருந்தது. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், "மாதம் 20,000 லிட்டர் இலவச குடி நீர் வழங்கப்படும்" என்று ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி அளித்தது.

இந்நிலையில் டெல்லியில் ஆட்சியமைத்த ஆம் ஆத்மி அரசு, மாதந்தோறும் 20ஆயிரம் லிட்டர் குடிநீர் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 50% கட்டணம் குறைக்கபடும் என கடந்தமாதம் 25-ந் தேதி அறிவித்திருந்தது. இதனிடையே டெல்லியில் தலை நகரில் குடிநீர்க் கட்டணம் 10% அதிகரிக்கப் படுகிறது என்று டெல்லி அரசு நேற்று அதிரடியாக அறிவித்தது. இலவச குடி நீர் வழங்குவதாக டெல்லி அரசு அறிவித்து ஒருமாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply