சென்னை – பெங்களூரு சாலை உட்பட, 10 முக்கியமான சாலைகள், சர்வதேசதரத்தில் அதிவிரைவு நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும்,'' என, மத்திய நெடுஞ் சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.

டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், நிதின் கட்காரி பேசியதாவது:வளர்ச்சிஅடைந்த நாடுகளை ஒப்பிடும்போது, நம்நாட்டில் சாலை வசதி மிகக்குறைவு. சாலைவசதி குறைவாக இருப்பதால் தான், அதிக விபத்துகள் நடந்து, உயிரிழப்பு ஏற்படுவதற்கு காரணமாகஉள்ளது. குறிப்பிட்ட இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு, அதிகநேரத்தை செலவிட வேண்டியுள்ளது.

இது போன்ற பிரச்னைகளுக்கு முற்றுப் பள்ளி வைப்பதற்காக, முக்கியமான, 10 சாலைகளை, உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றி அமைக்க முடிவு செய்யபட்டுள்ளது. இந்தசாலைகள், 'எக்ஸ்பிரஸ் வே' எனப்படும், அதி விரைவு நெடுஞ்சாலைகளாக அமைக்கப்படும். சென்னை – பெங்களூரு, நாக்பூர் – மும்பை, பரோடா – மும்பை, கத்ரா – அமிர்தசரஸ், லுாதியானா – டில்லி உள்ளிட்ட, 10 சாலைகள் இதற்காக தேர்வு செய்யப் பட்டுள்ளன. இவற்றில், சென்னை – பெங்களூரு இடையே, 240 கி.மீ., துாரத்துக்கு, 6,000 கோடி ரூபாய் செலவில் கான்கிரீட் சாலை அமைக்கப்படும். இது போன்ற அதிவிரைவு சாலைகளால், விபத்துகள் குறையும். பயணநேரம் குறைவதுடன், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.

Leave a Reply