10ம் -வகுப்பு தேர்வு முடிவுகள்  அனுஷா என்ற மாணவிமுதலிடம் தமிழகத்தில் பத்தரை லட்ச மாணவர்கள் எழுதிய 10ம் -வகுப்பு தேர்வுமுடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் ஈரோட்டை சேர்ந்த அனுஷா என்ற மாணவி 498 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார் . இவர்தவிர மேலும் 8மாணவிகள் 498 மதிப்பெண்களை பெற்று

முதலிடத்தை பிடித்துள்ளனர் .முதலிடத்தை பிடித்த 9 பேருமே மாணவிகள் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.

52 பேர் 497/500 மதிப்பெண்களை பெற்று மாநிலத்திலேயே 2ம் இடத்தை பிடித்துள்ளனர். 136 பேர் 496/500 மதிப்பெண்கள்பெற்று மாநிலத்திலேயே 3ம் இடம் பிடித்துள்ளனர்.

இந்த வருடம் 10ஆம் வகுப்புதேர்வில் 89% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் 92 சதவீதம் பேரும். மாணவர்கள் 86 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Leave a Reply