சட்ட சபை தேர்தல் பிரசாரம், நாளையுடன் நிறைவடைகிறது. அதனால், தேர்தல்பிரசாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. சென்னை, விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், எப்படியும் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற முனைப்பில், தொகுதியில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தேர்தல்பிரசாரம் முடிவடையும் கடைசி இரண்டு நாட்களும், தொகுதியில் சூறாவளி பிரசாரத்தை


மேற்கொள்ளவிருக்கிறார். இன்று, விருகம்பாக்கத்தில், காலை 6:00 மணி துவங்கி, இரவு 10:00 மணிவரை, 100 இடங்களில், அவர் ஓட்டுசேகரிப்பில் ஈடுபட உள்ளார். மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர ஸ்மிருதி இரானி, இன்று, தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடும் விருகம்பாக்கம் தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.

Tags:

Leave a Reply