மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதித் திட்டத்தின் கீழ் கூடுதலாக 50 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கிராமப்புற மக்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசின் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக ஊரகவேலை உறுதி திட்டத்தின் வேலை நாட்களை அதிகப்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுத்திருந்தார்.

இதனை ஏற்ற மத்திய அரசு நடப்பாண்டில் 100 நாட்கள் வேலைதிட்டத்தில் கூடுதலாக 50 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்க அனுமதி யளித்துள்ளது. 

இதன் மூலம் தமிழகத்தில் ஒருகோடியே 23 லட்சம் கிராமப்புற தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்றும், இத்திட்டம் மூலம் ஏரி, குளம், குட்டைகள் தூர்வாரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply