மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கான ஊதியத்தை அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இதுகுறித்து மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஊதியவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரூ.183-ல் இருந்து 203 ஆகவும் கேரளாவில் ரூ.229-ல் இருந்து 240 ஆகவும், கர்நாடகவில் ரூ.204-ல் இருந்து ரூ.224-ல் ஆகவும், ஆந்திராவில் ரூ.180-ல் இருந்து ரூ.194 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
 
தற்போது சட்ட சபை தேர்தல் நடக்கும் மாநிலங்களில் , ஊதிய உயர்வுகுறித்து ஊடகங்களில் விளம்பரப்படுத்தக் கூடாது,பிரசாரத்திலும் ஊதிய உயர்வுகுறித்து பேசக் கூடாது என்று மத்திய அரசில் தெரிவித்துள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு ரூபாய் 38,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் கூட்டத்தொடரில் கூறியது நினைவுகூறத்தக்கது. 

Leave a Reply