பா.ஜ.க.,வின் 3 நாள் தேசியகவுன்சில் கூட்டம் கேரளமாநிலம் கோழிக்கோட்டில் நடந்தது. இந்தகூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் கோழிக்கோடு வந்தார். அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றியவர், நேற்று நடந்த தேசியகவுன்சில் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.

பிரதமர் மோடிக்கு நேற்று மதிய உணவாக கேரளபாரம்பரிய ‘சத்யா’ விருந்து வழங்கப்பட்டது. 100 வகையான உணவு பொருட்களுடன், 15 வகையான பாயா சங்களும் அவருக்கு பரிமாறப் பட்டது. இதைப்பார்த்து வியந்த அவர், மகிழ்வுடன் விருந்தில் கலந்துகொண்டார்.

பிரதமர் மோடியுடன் பா.ஜ.க தலைவர்களும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம்வகிக்கும் கேரள மாநில கட்சிகளின் தலைவர்களும் ‘சத்யா’ விருந்து உண்டனர்.

Leave a Reply