குடியரசுத் தின விழாவிற்காக இந்தியாவரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷலுக்கு, பிரதமர் மோடி 100 பனாரஸ் பட்டு புடவைகளைப் பரிசளிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தியாவில் வரும் 26ம் தேதி குடியரசு தினவிழா நடைபெறுகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசு

தினவிழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்துகொள்கிறார். இதற்காக வரும் 24ம் தேதி ஒபாமா குடும்பத்தினர் டெல்லி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவரும் ஒபாமாவுக்கும் அவரது மனைவி மிஷேலுக்கும் பல்வேறு சிறப்புபரிசுகளை வழங்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஒபாமாவுக்கு சால்வை மற்றும் துணிகளை மடித்து வைக்கக் கூடிய தீப்பெட்டி அளவில் உள்ள கைப்பையை பிரதமர் மோடி வழங்குகிறார்.

அதற்கான பணிகளை தெலங்கானா மாநிலத்தில் சிர்சிலா நகரைசேர்ந்த நல்லா விஜய் மேற்கொண்டு வருகிறார். இதே போல், அவரது மனைவி மிஷலுக்கு பல்வேறு கலை வேலைப் பாடுகளுடன் கூடிய 100 பனாரஸ் புடவைகளை அன்பளிப்பாக வழங்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Leave a Reply