வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி பாராளுமன்ற தேர்தல் தேதி மார்ச்மாதம் அறிவிக்கப்பட உள்ளதையடுத்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்க உள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நாடுமுழுவதும் 100 கூட்டங்களில் பங்கேற்று பேச நரேந்திரமோடி திட்டமிட்டுள்ளார். அதன்மூலம் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க வியூகம்வகுத்துள்ளது.

கோவாவில் அடுத்தமாதம் தேர்தல் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் நரேந்திரமோடி பங்கேற்று பிரசாரம் செய்கிறார். இந்த கூட்டத்தில் பா.ஜ.க தலைவர்கள் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

இந்தகூட்டத்தில் 1 லட்சம்பேர் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூன்மாதம் கோவாவில் நடந்த பா.ஜ.க கூட்டத்தில் நரேந்திரமோடி பாஜக.,வின் தேர்தல் பிரசாரகுழு தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply