நாடுமுழுவதும் நவீன வசதிகளுடன் கூடிய 100 “ஸ்மார்ட்’ நகரங்களை உருவாக்கும் திட்டப்பணிகள் மிகவும் தீவிரமாக நிறைவேற்றப்படும் என மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களவையில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது

ஸ்மார்ட் நகரங்கள் திட்டம் தொடர்பாக அண்மையில் மத்திய, மாநில அரசுகளின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் பேசினோம். அத்திட்டத்தை செயல்படுத்துவதில் மத்தியஅரசு மிகவும் தீவிரமாக உள்ளது.

அதற்கான வழிமுறைகளையும், கொள்கைகளையும் அரசு வகுத்துவருகிறது. ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற மறுநிர்மாணத் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.12,397 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அதை மாநிலங்கள் சரிவர பயன் படுத்தவில்லை. ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவது என்பது சட்டஒழுங்கு, பாதுகாப்பு, வேலை வாய்ப்பு, போக்குவரத்து, வீட்டுவசதி, குடிநீர், சுகாதாரம், வாழ்வாதார வாய்ப்புகள் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதாகும். இவற்றை கொண்ட செயல்திட்டத்தை உருவாக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது என்றார்

Leave a Reply