திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி சுதீப் பந்த்யோபத்யா சிபிஐ யால் கைதுசெய்யப்பட்ட நிலையில் கொல்கத்தாவில் உள்ள பாரதீய ஜனதா அலுவலகம் மீது திரிணாமூல் காங்கிரஸ்கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
 
ஆயிரக்கணக்கான மூதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.10,000 கோடிக்கு அதிகமாக மோசடிசெய்ததாக ரோஸ் வேலி நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது. நிதிநிறுவன மோசடி வழக்குகளின் கீழ் வரும் வழக்குகளில் ஒன்றாக இந்நிறுவனம் மீது வழக்குபதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் இந்நிறுவனத்துக்கு எதிராக வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் அமலாக்கத் துறை, இந்தகுழுமத்துக்கு சொந்தமாக நாடு முழுவதிலும் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு அமலாக்கத்துறை சீல்வைத்துள்ளது.இந்நிலையில், ரோஸ் வேலி ஊழல் வழக்கு தொடர்பாக திரிணாமூல் கட்சியைசேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுதீப் பந்த்யோபத்யாயை சிபிஐபோலீசார் கைதுசெய்துள்ளனர்.
 
இதையடுத்து இன்று கொல்கத்தாவில் பாரதீய ஜனதாவின் கட்சி அலுவலகம்மீது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாஜக அலுவலகத்திற்கு கடும்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply