மும்பையில் அம்பேத்கர் நினைவ கத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி நேற்று அடிக்கல் நாட்டினார். அந்த இடத்தில் 150 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்படுகிறது.

மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுக பொறுப்புகழகத்தில் 4–வது டெர்மினலுக்கு அடிக்கல் நாட்டுவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மும்பை வந்தார்.

தாதர் இந்து மில் வளாகத்தில் அம்பேத்கர் நினைவக அடிக்கல் நாட்டுவிழாவுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு ரூ.400 கோடி மதிப்பீட்டில் அமைய இருக்கும் பிரமாண்ட அம்பேத்கர் நினை வகத்துக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார். இதற்கான பணிகள் தற்போதைய பா.,ஜனதா ஆட்சியிலேயே முடிவடைந்து, பொதுமக்கள் பார்வைக்கு திறக்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் அமைய இருக்கும் இந்நினை வகத்தில் அம்பேத்கர்கருக்கு 150 அடி உயரத்தில் சிலை அமைக்கபடுகிறது. மேலும், இந்தசிலைக்கு அருகாமையில் 140 அடி உயரம் மற்றும் 110 மீட்டர் சுற்றளவில் ‘ஸ்தூபி’ எழுப்பப் படுகிறது. தவிர, அம்பேத்கர் நினைவக கட்டமைப்பை முழுமையாக மூடும்வண்ணம் அசோகசக்கரம் ஒன்றும் பொருத்தப்படுகிறது. இது மட்டுமின்றி, ஒரேநேரத்தில் 13 ஆயிரம் பேர் அமர்ந்து தியானம் செய்யும் பொருட்டு, தியான அறையும் கட்டப் படுகிறது. ஒட்டுமொத்தத்தில், இந்த நினைவகம் சுமார் 7.4 ஹெக்டேர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக அமைகிறது.

Leave a Reply