பீஹாரில், மூத்த அமைச்சர் லஞ்சம்வாங்கிய, ‘வீடியோ’ வெளியானதை அடுத்து, மாநில முதல்வர் நிதிஷ் குமாரையும், அவருடன் கூட்டணிசேர்ந்துள்ள, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்தையும், ‘வெட்கம் கெட்டவர்கள்’ என, பிரதமர் நரேந்திரமோடி கடுமையாக சாடியுள்ளார்.

பாபுவா தொகுதிகளில், மோடி பேசியதாவது:பீஹார் மாநில மூத்தஅமைச்சர், அவதேஷ் பிரசாத் குஷ்வகா, லஞ்சம்பெற்ற சம்பவம், ஊழலை ஒழிக்க பாடுபட்ட, மறைந்த, பொதுவுடைமை தலைவர் ஜெயப் பிரகாஷ் நாராயணின் பிறந்த நாளில் நிகழ்ந்தது, மிகவும் கொடூரமான விஷயம்.இத்தகைய தலைவர்கள், பீஹாரின் கவுரவத்தை குழி தோண்டி புதைக்கின்றனர். இவர்களுக்கு, வெட்கம் என்பது சிறிதும் இல்லை . லஞ்சம் பெற்றதை காட்டும் வீடியோவில், ஐந்து அமைச்சர்களுக்கு பணம்செல்வதாக, குஷ்வகா கூறுகிறார். அந்த ஐந்துபேரின் பெயர்களையும் வெளியிட வேண்டும்.

பீஹார் மாநில அரசில் பாஜக., பங்கேற்றவரை, ஊழல் சம்பவங்கள் எதுவும் நடக்க வில்லை. ஆனால், ஐக்கிய ஜனதாதள தலைவர், ஊழலில் நிபுணத்துவம் பெற்ற, மகாபுருஷருடன் கைகோர்த்த நாள் முதல், ஊழல் சாதாரணமாகி விட்டது. பீஹார் முதல்வர் தலைமையில் அமைந்த, ‘மகாகூட்டணி’ உண்மையில், ‘மகா சந்தர்ப்பவாத கூட்டணியாக உள்ளது.மக்கள் கவனமாக ஆராய்ந்து, மாநில வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள, பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு மோடி பேசினார்.

Tags:

Leave a Reply